பா.ஜ., தலைவர்களிடம் பிரணாப் வேண்டுகோள்
பா.ஜ., தலைவர்களிடம் பிரணாப் வேண்டுகோள்
பா.ஜ., தலைவர்களிடம் பிரணாப் வேண்டுகோள்
ADDED : ஆக 13, 2011 12:50 AM

புதுடில்லி : மசோதாக்களை, பார்லிமென்டில் சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைக்கும்படி, பா.ஜ., மூத்த தலைவர்களை சந்தித்து, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் மொத்தம் 28 நாட்கள் நடக்கிறது. இதில், இரண்டு வாரங்கள் முடிந்துவிட்டன. இதுவரை பெரும்பாலான நாட்கள், பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால், சபை நடவடிக்கைகள் சுமுகமாக நடக்கவில்லை. அதனால், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல், அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பார்லிமென்ட் கூட்டத்தொடர் நடக்கவுள்ள, மீதமுள்ள நாட்களிலாவது, மசோதாக்கள் சுமுகமாக நிறைவேற்றப்பட வேண்டும் என, மத்திய அரசு விரும்புகிறது. இதையடுத்து, அத்வானி உள்ளிட்ட, பா.ஜ., மூத்த தலைவர்களை, மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, பவன்குமார் பன்சால் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பு, 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது, மசோதாக்களை பார்லிமென்டில் சுமுகமாக நிறைவேற்ற ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொண்டனர்.


