PUBLISHED ON : ஆக 18, 2011 12:00 AM
நெருப்பை அணைக்கும் நெருப்பு
நெருப்பை அணைக்க நீர், மணல், கார்பன்டை ஆக்சைடைப் பயன்படுத்துவர். நெருப்பை அணைக்க, நீரைப் பயன்படுத்துவதை விட, வெடி மருந்து கலந்த நீர், விரைவில் நெருப்பை அணைக்க உதவும் இது முரண்பாடாகத் தோன்றினாலும், வெடி மருந்தைப் பயன்படுத்தினால், வெடி மருந்து விரைவில் எரிந்து எரிய முடியாத வாயுவை ஏராளமாக உண்டாக்கும். இந்த வாயு எரியும் பொருளைச் சூழ்ந்து கொண்டு, எரிவைத் தடுத்து நிறுத்துகிறது.
இது தவிர காட்டுத்தீ அல்லது புல்வெளியில் ஏற்படும் தீயை அணைப்பதற்குப் புல்வெளியின் மறுகோடியில் தீ வைப்பர். இரண்டு தீச்சுவர்களும் ஒன்றையொன்று சந்தித்து விழுங்கி அணைந்து போகின்றன. மேற்கத்திய நாடுகளில், எல்லாவிதக் கட்டடங்களுக்கும் தீ அணைக்கும் கருவிகள் மிகவும் அவசியமாகும். தீ அணைக்கும் விழிப்புணர்வையும் பணியாளர்கள் தெரிந்து வைத்திருப்பர். இந்தியாவில் தான் இந்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது.
தகவல் சுரங்கம்
நாய்களுக்கு 'கிளப்'
நாய்களுக்கு 'கிளப்'
நாய்களுக்கென்று 'கென்னல் கிளப்' என்ற அமைப்பு உள்ளது. 1873ல் இது இங்கிலாந்தில் துவங்கப்பட்டது. 'கென்னல்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு 'நாய்க்கூட்டம்' என்று அர்த்தமாகும். 1884ல் அமெரிக்காவில் இது துவங்கப்பட்டது. சென்னையிலும் இதன் கிளை அமைப்பு உள்ளது. நாய்களுக்கென்று வேட்கைப் பருவம் உண்டு. இதனை 'ஹீட் பீரியட்' என்பர். பெண் நாயை வளர்ப்பவர்கள், அதே இனத்தைச் சேர்ந்த ஆண் ஜோடியைத் தேடுவர். இவர்களுக்கு கென்னல் கிளப் உதவுகிறது. அந்தந்த வகை நாய்களுக்குள்ள தனித்தன்மையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, கலப்பினப் பெருக்கத்தை நாய் வளர்ப்பவர்கள் விரும்புவதில்லை.
எனவே இது போன்ற கிளப்களின் உதவி தேவையாய் உள்ளது. ஒரு நாய் சராசரி 4ல் இருந்து 6 குட்டிகள் வரை போடும். பெண் நாயை வைத்திருப்பவர்கள், இவற்றை விற்று கணிசமாக சம்பாதிக்கலாம். எனவே ஆண் நாய்களின் உரிமையாளர்கள் அதிக தொகை கேட்பர். தற்போது இது நல்ல வியாபாரமாகி விட்டது.


