ADDED : அக் 06, 2011 11:55 PM
விருதுநகர் : '' விருதுநகரை முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன் ,''என
,அ.தி.மு.க., வேட்பாளர் சாந்தி தெரிவித்தார்.
தனக்கும், நகராட்சி வார்டு
அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து
பேசுகையில், ''விருதுநகர் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும்
மேற்கொள்ளவில்லை. அனைத்து வார்டுகளிலும், குப்பைகளை அகற்ற முடியாத
நிலையில், குண்டும், குழியுமான ரோடுகள், குடி நீருக்காக அல்லல் படும் நிலை
உள்ளது. நகராட்சி தலைவராக ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் எனக்கு
வாக்களித்தால் விருதுநகர் நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன்.
மக்களின் அடிப்படை பிரச்னையான குப்பைகள் அகற்ற துப்புரவு பணியாளர்களை
நியமித்து தூசியில்லாத நகராக மாற்றுவேன். குடிநீர் வினியோகம் சீராக்க குடி
நீர் வால்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள்
அனைத்தும் செயல்பட செய்து , தட்டுப்பாடு இல்லாமல் குடி நீர் வழங்க
நடவடிக்கை எடுப்பேன். மேலும், லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை நடத்துவேன்.
ஆண்டு தோறும் எனது சொத்துக்கணக்கு பட்டியல் வெளியிடுவேன். நகராட்சி
ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுப்பேன், என்றார்.


