ADDED : ஆக 09, 2011 02:44 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தை சேர்ந்த கண்ணன் மகன் செல்வம்,30.
இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கிடையே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து ஏற்பட்டது. மணிமேகலை யின் சொத்துக்கு தோட்டப்பாடியை சேர்ந்த பழனி மகன் சக்தி, 32 என்பவர் பவர் ஏஜண்டாக உள்ளார்.கடந்த 5ம் தேதி மணிமேகலையின் இடத்தை சக்தி விற்பதற்காக வீட்டுமனை பிரித்துள்ளார். தகவலறிந்த செல்வம் சம்பவ இடத்திற்கு வந்து தகராறு செய்து, சக்திக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிந்து செல் வத்தை கைது செய்தனர்.


