/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே விபத்தால் போக்குவரத்து பாதிப்புஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் அருகே விபத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 16, 2011 01:40 AM
ஆழ்வார்குறிச்சி : ஆழ்வார்குறிச்சியில் தெப்பக்குளம் வளைவில் விபத்து ஏற்பட்டது.
இதனை உடனே போலீஸ் சீர் செய்யாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சியில் நேற்று காலை சுமார் 9.25 மணியளவில் அகஸ்தியர்பட்டிக்கு செல்லும் டவுன் பஸ்சும், அம்பையிலிருந்து ஆழ்வார்குறிச்சி நோக்கி வந்து கொண்டிருந்த காரும் ஆழ்வார்குறிச்சியில் எஸ் வளைவு உடைய தெப்பக்குளம் அருகில் வரும் போது ஒன்றுக்கு ஒன்று உரசியது. இதனால் அம்பையில் இருந்து ஆழ்வார்குறிச்சி வரும் வாகனங்களும், ஆழ்வார்குறிச்சியில் இருந்து அம்பை செல்லும் வாகனங்களும் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. சுமார் 10 நிமிடங்கள் ஆகியும் இரு டிரைவர்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களே தவிர சமாதானம் ஏற்படவில்லை. இந்நிலையில் பொதுமக்களில் ஒருவர் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். உடனே ஆழ்வார்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் சம்பவ இடத்திற்கு வந்தார். சம்பவ இடத்திற்கு வந்தவுடன் டிராபிக்கை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள், ஆழ்வார்குறிச்சி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகம் செல்லும் அதிகாரிகள், ஆஸ்பத்திரி செல்லும் நோயாளிகள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பின்னர் ஒருவரையொருவர் முண்டிக் கொண்டு பைக்குகளில் முன்னேறும் நிலையை பார்த்த பின்னர் சப்-இன்ஸ்பெக்டர் போக்குவரத்தை சீரமைத்து கொடுத்தார். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை. ஆனால் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து உடனடியாக சீரமைக்காததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆழ்வார்குறிச்சி தெப்பக்குளம் எஸ் வளைவு மிகவும் ஆபத்தான இடமாகும். இங்கு வேகத்தடை இல்லாத காரணத்தினால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. வேகத்தடை அமைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் தடுக்கலாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


