/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/உள்ளாட்சித் தேர்தலுக்கு 14,901 பேர் மனு தாக்கல்உள்ளாட்சித் தேர்தலுக்கு 14,901 பேர் மனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு 14,901 பேர் மனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு 14,901 பேர் மனு தாக்கல்
உள்ளாட்சித் தேர்தலுக்கு 14,901 பேர் மனு தாக்கல்
ADDED : செப் 30, 2011 12:24 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தமுள்ள
3,765 பதவிகளுக்கு போட்டியிட 14,901 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3765 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடக்கிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 22ம் தேதி முதல் தங்களது
வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று
கடைசி நாள் என்பதால், கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 125
பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 975 பேரும், பஞ்சாயத்து தலைவர்
பதவிக்கு 1,082 பேரும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 4601 பேரும்
வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர்
நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட 40 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு
போட்டியிட 510 பேரும், ஆறு டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட 50
பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட 328 பேரும் சேர்த்து
மொத்தம் நேற்று மட்டும் 7,711 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பு மனு தாக்கல் தொடங்கி நேற்று முன்தினம் வரை ஏழு நாட்கள் ஆன நிலையில்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம்7,190 பேர் வேட்பு மனுக்களை தாக்கல்
செய்தனர். வேட்பு மனு தாக்கலின் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் 7,711 பேர்
வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். இதனையும் சேர்த்து கிருஷ்ணகிரி
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மொத்தம் 14,901 பேர் வேட்பு
மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் இன்று (30ம் தேதி)
பரிசீலிக்கப்படுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ம் தேதி
கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்.