Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தற்கொலை

திருமணமாகாத ஏக்கம் வாலிபர் தற்கொலை

ADDED : ஆக 12, 2011 10:19 PM


Google News
துறையூர்: துறையூர் அருகே வெங்கடாஜலபுரம் தபால் அலுவலகம் அருகில் ஓட்டல் நடத்தி வந்த சுப்ரமணியன்(25) அங்கேயே தங்கிக் கொள்வது வழக்கம். பெற்றோரும் இல்லாததால் திருமணமாகாத வருத்தத்திலும் இருந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்து வைத்து விட்டு தூங்கச் சென்றுள்ளார். நேற்று காலை அவரது சித்தி சரோஜா வந்து பார்த்தபோது கடை உட்புறம் வேட்டியில் தூக்கு மாட்டி இறந்து கிடந்தார்.

உப்பிலியபுரம் போலீஸார், பிணத்தை பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.* புலிவலம் கவுண்டர் தெருவில் வசிப்பவர் தொட்டம்மாள்(42). இவரது கணவர் கந்தசாமி சில ஆண்டுக்கு முன் இறந்துவிட்டார். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று அதிகாலை ஐந்து மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார்.அவரது அலறல் சப்தம் கேட்டு மற்றொரு அறையில் படுத்திருந்த அவரது மகன் ரமேஷ்(24) அக்கம், பக்கத்தினர் உதவியுடன் தாயை காப்பாற்ற முயன்றார். தீயை அணைத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொட்டம்மாள் இறந்தார். புலிவலம் போலீஸார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us