/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமராபதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா
பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா
பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா
பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா
ADDED : செப் 30, 2011 01:22 AM
விருதுநகர் : பதட்டமான ஓட்டு சாவடிகளில் துப்பாக்கி போலீசார், கேமரா அமைக்க வேண்டும் என, விருதுநகர் எஸ்.பி ., அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தலைமையில் நடந்த, உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.
உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் நடத்துவது குறித்து, நேற்று விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்தில் தென்மண்டல ஐ.ஜி., ராஜேஷ் தாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.பி.,க்கள் நஜ்மல் கோதா (விருதுநகர்), அருண்(கன்னியாகுமரி), நரேந்திர நாயர்(தூத்துக்குடி), விஜயேந்திர பிடாரி(திருநெல்வேலி), திருநெல்வேலி கமிஷனர் வரதராஜ், விருதுநகர் டி.எஸ்.பி., ராமமூர்த்தி கலந்து கொண்டனர். சட்டசபை தேர்தல் போல் உள்ளாட்சி தேர்தல் நடக்க, போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். பதட்டமான ஓட்டு சாவடிகளுக்கு வெப் கேமராவுடன் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பளிக்க வேண்டும், என ஆலோசனை வழங்கப்பட்டது.