/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஸ்டிரைக்
ADDED : செப் 30, 2011 01:44 AM
விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்கள்
திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம்
மாவட்ட அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு
தங்கும் விடுதி உள்ளது. இங்கு தண்ணீர், உணவு உள்ளிட்ட பிரச்னைகளை தீர்க்க
வலியுறுத்தி நேற்று காலை 9 மணியளவில் முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள்
வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். பின்னர் கல்லூரி டீன்
தேன்மொழி வள்ளியை சந்தித்து விடுதியில் உள்ள குறைகளை தீர்க்க வேண்டுமென
கோரிக்கை விடுத்தனர். இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியதால்
மாணவ, மாணவிகள் காலை 9.45 மணிக்கு வகுப்புகளுக்கு சென்றனர்.