ADDED : அக் 07, 2011 01:29 AM
செஞ்சி : முட்டத்தூர் பகுதியில் நேற்று முன் தினம் கஞ்சனூர் இன்ஸ்பெக்டர்
சங்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், ஷேக் காதர் மற்றும்
போலீசார் ஆய்வு செய்தனர்.
கிராமத்தில் உள்ள பொது சுவற்றில் ஊராட்சி தலைவர்
பதவிக்கு போட்டியிடும் முகிலன், ஏழுமலை தேர்தல் விளம் பரம் எழுதி
இருந்தனர். இருவர் மீதும் தேர்தல் விதி மீறல் சட்டத்தில் போலீசார் வழக்கு
பதிந்தனர்.மேல்மலையனூரில் மின் கம்பத்தில் தேர்தல் விளம்பர டிஜிட்டல் பேனர்
கட்டியிருந்த வேட்பாளர்கள் சேகர், சுரேஷ், ரமேஷ், உண்ணாமலை மீது வளத்தி
போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


