Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/நிலவில் தண்ணீர் இருப்பதை நிரூபித்தது "சந்திரயான்' தான் :விஞ்ஞானி தகவல்

நிலவில் தண்ணீர் இருப்பதை நிரூபித்தது "சந்திரயான்' தான் :விஞ்ஞானி தகவல்

நிலவில் தண்ணீர் இருப்பதை நிரூபித்தது "சந்திரயான்' தான் :விஞ்ஞானி தகவல்

நிலவில் தண்ணீர் இருப்பதை நிரூபித்தது "சந்திரயான்' தான் :விஞ்ஞானி தகவல்

ADDED : அக் 08, 2011 02:08 AM


Google News
மதுரை : ''இந்தியாவின் 'சந்திரயான்' விண்கலம் தான், நிலவில் தண்ணீர் இருப்பதை, முதன் முதலாக உறுதி செய்தது,'' என, மதுரை தியாகராஜர் கல்லூரி விண்வெளி வார கண்காட்சியில் இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் தெரிவித்தார்.

அவர் பேசியதாவது: எத்தனையோ நாடுகள் நிலவில் ஆராய்ச்சி செய்தன. இந்தியாவின் 'சந்திரயான்' விண்கலம் தான், நிலவில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்தது. ஓராண்டு கால முடிவில், நிலவின் முப்பரிமாணங்களை படம்பிடித்துள்ளது. அதன்பிறகே இந்தியாவில் விஞ்ஞான எழுச்சியும், விஞ்ஞானத்தின் மீது மரியாதையும் ஏற்பட்டது. விண்வெளியை தொட்டுச் சொல்லும் அனைத்திலும் விஞ்ஞானம் அரிய புரட்சியை செய்துள்ளது. தொலைத் தொடர்பு, பேரிடர் மேலாண்மை போன்ற சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு விண்வெளி விஞ்ஞானம் உதவி வருகிறது. 45 லட்சம் ஆண்டுகளாக இருந்து வரும் இயற்கை வளங்களை, 200 ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்தி விட்டோம். வேற்றுக்கிரக வளங்களையும் பயன்படுத்த ஆராய்ச்சி செய்கிறோம். விஞ்ஞான வளர்ச்சியிலிருந்து மாணவர்கள் விடுபட்டு போய்விடக் கூடாது. உலகளவில் விண்வெளி தரவரிசையில் ஆறாவது இடத்தில் இந்தியா உள்ளது. முதலிடத்திற்கு கொண்டு வர, மாணவர்கள் முன்வரவேண்டும், என்றார்.உதவி பேராசிரியர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். முதல்வர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். இஸ்ரோ பொது மேலாளர் ராமசேஷன், முதன்மை பொதுமேலாளர் (ஓய்வு) சிவசுப்ரமணியன் பேசினர். பேராசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார். விண்வெளி கண்காட்சியில் ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எல்.வி., எஜூசாட், கிரையோஜெனிக் இயந்திர செயல்பாடு குறித்த மாதிரிகள், செயற்கைகோள்களின் பயன், விண்கலன் ஏவும் விதம் குறித்த வரைபடங்கள் இடம் பெற்றன. கண்காட்சியை இன்று பார்வையிடலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us