/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/திருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சிதிருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
திருவள்ளூர் நகராட்சியில் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : அக் 11, 2011 02:21 AM
திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் உள்ள, பூத்களில் பணியாற்ற உள்ள தேர்தல் அலுவலர்களுக்கு, நேற்று தேர்தல் பயிற்சி அளிக்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட, 27 வார்டுகளுக்கு நடைபெற உள்ள தேர்தலில் பணியாற்ற உள்ள, ஓட்டுப் பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் ஓட்டுப் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, நேற்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், தோட்டக்கலை, விவசாயம், நூலகம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை உள்ளிட்ட, அரசுத் துறை ஊழியர்கள் 250 பேர், இப்பயிற்சியில் பங்கேற்றனர். நகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சியில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் மூலம், மாதிரி ஓட்டுப் பதிவு செய்வது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல், பதிவேடுகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்தும் இப்பயிற்சியில் விளக்கப்பட்டது. மேலும் இப்பயிற்சியின் போது, ஓட்டுச் சாவடிகளில் வேட்பாளர்களின் முகவர்கள் மெபைல் போன்களை பயன்படுத்தக் கூடாது. ஓட்டுச் சாவடி அருகே 200 மீட்டர் தூரம் வரை, வேட்பாளர்கள் தங்கள் சின்னங்களை வரையக் கூடாது, ஓட்டு சேகரிக்க அனுமதிக்கக் கூடாது என, தேர்தல் அலுவலர்களுக்கு ஆணையர் அறிவுறுத்தினார்.


