/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நெய்வேலியில் ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்நெய்வேலியில் ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
நெய்வேலியில் ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
நெய்வேலியில் ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
நெய்வேலியில் ரூ.3 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
ADDED : அக் 12, 2011 01:18 AM
நெய்வேலி : நெய்வேலி தொ.மு.ச., தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை
செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள
புதுச்சேரி சரக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
என்.எல்.சி., அங்கீகாரம்
பெற்ற சங்கமான தொ.மு.ச.,வின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நாளை
மறுதினம் (14ம் தேதி) நடக்கிறது. எம்.எல்.ஏ., - எம்.பி., தேர்தலை மிஞ்சும்
வகையில் தேர்தல் பிரசாரத்தில் பணம் மற்றும் சரக்குகள் அதிகளவில்
புழங்குவதாகவும், குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் புதுச்சேரியிலிருந்து பல
லட்சம் ரூபாய் மதிப்புள்ள போலி சரக்குகளை கடத்தி வந்து பதுக்கி
வைத்திருப்பதாகவும் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்
போலீசார் நேற்று டவுன்ஷிப் வட்டம் 2ல் உள்ள மெட்ராஸ் சாலையில் உள்ள அரசு,
40 என்பவர் வீட்டை திடீர் சோதனை நடத்தினர். அதில் 3 லட்சம் ரூபாய்
மதிப்புள்ள போலி மதுபான பாட்டில்கள் சிக்கின. டவுன்ஷிப் போலீசார் வழக்கு
பதிந்து என்.எல்.சி., லேபர் கான்ட்ராக்டர் சம்பத்குமார், 37, வட்டம் 9ஐ
சேர்ந்த குமார், 27 ஆகியோரை கைது செய்து அரசுவை தேடிவருகின்றனர்.


