/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஒரே தெருவுக்கு ஐந்து வார்டுகள்! தஞ்சை பொதுமக்கள் ஆவேசம்; தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்புஒரே தெருவுக்கு ஐந்து வார்டுகள்! தஞ்சை பொதுமக்கள் ஆவேசம்; தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
ஒரே தெருவுக்கு ஐந்து வார்டுகள்! தஞ்சை பொதுமக்கள் ஆவேசம்; தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
ஒரே தெருவுக்கு ஐந்து வார்டுகள்! தஞ்சை பொதுமக்கள் ஆவேசம்; தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
ஒரே தெருவுக்கு ஐந்து வார்டுகள்! தஞ்சை பொதுமக்கள் ஆவேசம்; தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு
ADDED : அக் 12, 2011 02:27 AM
தஞ்சாவூர்: ''ஒரே தெருவை ஐந்து வார்டுகளாக மாற்றி அடிப்படை வசதிக்கு
ஏங்கும் நிலையை ஏற்படுத்தியதைக் கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு
போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,'' என்று தஞ்சை மேட்டுப்பிள்ளையார் கோவில் தெரு
வாக்காளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை மேட்டுப்பிள்ளையார்
கோவில் தெரு வாக்காளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான
பாஸ்கரனை சந்தித்து அளித்த மனு: தஞ்சை நகராட்சிக்குட்பட்ட
மேட்டுப்பிள்ளையார் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக நாங்கள் வசித்து
வருகிறோம். எங்கள் தெருவில் அனைத்து மதம், ஜாதி, இனம், மற்ற மொழி பேசுவோர்
என்று அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம்.
கடந்த 1996ம் ஆண்டின் போது நடந்த தேர்தலில் எங்கள் தெரு வார்டு எண்-22,
வார்டு எண்-33 என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது இரண்டு
கவுன்சிலர்களையும் சந்தித்து, ஒரே வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்க கோரிக்கை
விடுத்தோம். பலனில்லை. கடந்த 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது
இரண்டாக இருந்த தெருவை வார்டு எண்-22, வார்டு எண்-33, வார்டு எண் 34 என்று
மூன்றாக பிரித்தனர். அடிப்படை வசதிகளுக்கு மூன்று கவுன்சிலர்களை
எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது நடக்க உள்ள உள்ளாட்சி
தேர்தலில் எங்கள் பகுதியை வார்டு எண்-22, வார்டு எண்-31,32,33,34 என்று
ஐந்து வார்டுகளாக மாற்றியுள்ளனர். இதனால் அடிப்படை வசதிகளையே நாங்கள் பெற
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை
தொடர்பாக பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்கள்
பகுதியில் அடிப்படை வசதிகளை பெற, ஒரே கவுன்சிலரிடம் கோரிக்கைகளை
தெரிவிக்கும் வகையில், எங்கள் தெரு வாக்குகளை ஒரே வார்டுக்குள் கொண்டு
வந்து எங்கள் பகுதியை ஒரே வார்டாக அறிவிக்க வேண்டும். இந்த கோரிக்கையை
வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். கோரிக்கை
நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு அந்த மனுவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து
மேட்டுப்பிள்ளையார் கோவில் வாக்காளர்கள், மனுவின் நகலை மாநில தேர்தல்
ஆணையம், தஞ்சை நகராட்சிக்கும் அனுப்பினர்.


