/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிபேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பேட்ரிக் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 13, 2011 01:46 AM
புதுச்சேரி:செயின்ட் பேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ்., மற்றும்
சமுதாய நலப்பணித் திட்டம் இணைந்து, கண்பாதுகாப்பு, கண் தானம் பற்றிய
விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தியது.நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர்
பிரெடரிக் தலைமை தாங்கினார். ஜிப்மர் மருத்துவமனை கண் சிகிச்சை நிபுணர்
நடராஜன், படக்காட்சி மூலம் கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் தானம்
செய்யும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கினார். நாட்டு நலப்பணித்
திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, சமுதாயநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்
திமோத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில்
பள்ளி தாளாளர் ரெஜிஸ், இயக்குனர் லில்லி, நிர்வாக அதிகாரி மார்ட்டின்,
பள்ளி துணை முதல்வர் அல்போன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை
சமுதாய நலப்பணித் திட்ட அதிகாரி ஸ்ரீனிவாசன், நாட்டு நலப்பணித் திட்ட
அதிகாரி இளவழகன், ஆசிரியர்கள் ராஜேந்திரன், ஆனந்து ஆகியோர் செய்திருந்தனர்.


