Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பராமரிப்பின்றி பாழாகி வரும் தில்லை காளியம்மன் கோவில் குளம்

பராமரிப்பின்றி பாழாகி வரும் தில்லை காளியம்மன் கோவில் குளம்

பராமரிப்பின்றி பாழாகி வரும் தில்லை காளியம்மன் கோவில் குளம்

பராமரிப்பின்றி பாழாகி வரும் தில்லை காளியம்மன் கோவில் குளம்

ADDED : ஜூலை 13, 2011 11:48 PM


Google News

சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் சிவப்பிரியை தீர்த்தகுளம் பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதுடன், பக்கவாட்டு சுவர்கள் உடைந்துள்ளது.சிதம்பரம் நகரின் நுழைவு வாயில் அருகிலேயே தில்லைக் காளியம்மன் கோவில் அமைந்துள்ளது.

நடராஜர் கோவிலுக்கு வருபவர்கள் தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.அத்துடன் ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால பூஜை, அமாவாசை பூஜை காலங்களில் ஆயிரக்கணக்கில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கோவிலுக்கு வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் இங்கு நடக்கிறது.இவ்வளவு சிறப்பு வாய்ந்த தில்லைக்காளியம்மன் கோவிலில் ஏற்கனவே திருமண மண்டபம் கட்டப்பட்டு பயனற்று கிடக்கிறது. அத்துடன் கோவில் குளமான சிவப்பிரியை தீர்த்த குளமும் பராமரிப்பின்றி சீரழிந்து துர்நாற்றம் வீசுகிறது.



பக்தர்கள் நீராடிய இக்குளம் அப்பகுதி மக்களால் அசுத்தம் செய்யப்பட்டு வருகிறது.கடந்த 2001ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தில் குமராட்சி ஒன்றிய நிதியில் குளம் தூர்வாரப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் தூர்வாரி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.ஆனால் முறையாக பராமரிக்கப்படாமல் மீண்டும் குளம் பாழாகி பழைய நிலைக்கே வந்து விட்டது. எனவே புண்ணிய தீர்த்த குளமான தில்லை காளியம்மன் கோவில் குளத்தை சீரமைத்து இழந்த சிறப்பை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us