Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/ஆசிரியர் கல்விக்கான 4ம் நாள் கவுன்சலிங் பங்கேற்ற 762 பேருக்கு சேர்க்கை ஆணை

ஆசிரியர் கல்விக்கான 4ம் நாள் கவுன்சலிங் பங்கேற்ற 762 பேருக்கு சேர்க்கை ஆணை

ஆசிரியர் கல்விக்கான 4ம் நாள் கவுன்சலிங் பங்கேற்ற 762 பேருக்கு சேர்க்கை ஆணை

ஆசிரியர் கல்விக்கான 4ம் நாள் கவுன்சலிங் பங்கேற்ற 762 பேருக்கு சேர்க்கை ஆணை

ADDED : ஜூலை 15, 2011 12:06 AM


Google News

திருச்சி: தமிழகம் முழுவதும் இரண்டாண்டு ஆசிரியர் கல்வி பட்டயப்பயிற்சி வகுப்புச் சேர்க்கைக்கான, ஒற்றைச்சாளர முறை கவுன்சலிங், திருச்சியில் கடந்த 11ம் தேதி துவங்கியது.

திருச்சி ஆர்.சி., மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், முதல்நாள் கவுன்சலிங்கில், மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மற்றும் ராணுவத்தினரின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்புப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பித்த 100 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 77 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. இரண்டாம் நாளில் சிறப்புப்பிரிவுக்கான கவுன்சலிங் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் 127 பேர், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் 133 பேர், விடுதலை வீரர் வாரிசுகள் 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 180 பேரில், 141 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. மூன்றாம்நாளில், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது மற்றும் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் பயிலும் மாணவருக்கு கவுன்சலிங் நடந்தது. 141 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 100 பேரில் 91 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. நான்காம் நாளான நேற்று, திருச்சி ஆர்.சி., மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், தொழில்பாடப்பிரிவு மாணவருக்கும், சுந்தர் நகர் நாகம்மை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், அறிவியல் பாடப்பிரிவு மாணவருக்கும், பிராட்டியூர் ஆக்ஸ்போர்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், கலைப்பாடப்பிரிவு மாணவருக்கும் கவுன்சலிங் நடந்தது. தொழில்பாடப்பிரிவில் 462 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பங்கேற்ற 292 பேரில் 282 பேருக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டது. அறிவியல் பாடப்பிரிவில் 515 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டது. பங்கேற்ற 221 பேரில் 220 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. கலைப்பாடப்பிரிவில், 474 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பங்கேற்ற 269 பேரில் 260 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 23ம் தேதி வரை கவுன்சலிங் நடக்கிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us