Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/தேசிய மல்யுத்த போட்டி மாணவர்கள் பங்கேற்பு

தேசிய மல்யுத்த போட்டி மாணவர்கள் பங்கேற்பு

தேசிய மல்யுத்த போட்டி மாணவர்கள் பங்கேற்பு

தேசிய மல்யுத்த போட்டி மாணவர்கள் பங்கேற்பு

ADDED : ஜூலை 31, 2011 01:02 AM


Google News

கரூர்: கரூர் பி.ஏ., வித்யாபவன் மேல்நிலைப்ளப்ளி மாணவர்கள் நாகர்கோவிலில் மல்யுத்தக் கழகம் சார்பில் நடந்த தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டியில் பங்கேற்றனர்.நடப்பு 2011-12ம் ஆண்டுக்கான மாநில அளவிலான மல்யுத்தப்போட்டி திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடந்தது.

போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில், கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் தழலன் மாநில அளவில் முதலிடமும், ராஜசேகர் மாநில அளவில் முதலிடம் பெற்று தேசிய அளவிலான மல்யுத்த போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்தது.இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இதில் பி.ஏ.வித்யாபவன் மாணவர்கள் தேசிய அளவிலான மல்யுத்த போட்டியில் பங்கேற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி தலைவர அம்மையப்பன், பள்ளி நிர்வாக குழு உறுப்பினர்கள், பள்ளி கவுரவ ஆலோசகர் சீனிவாசன், பள்ளி தலைமையாசிரியர் பிரகாசம், உதவி தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us