ராணுவத்திற்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு
ராணுவத்திற்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு
ராணுவத்திற்கு சொந்தமான 12 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 04, 2011 01:29 AM
புதுடில்லி : 'நாடு முழுவதும் ராணுவத்திற்குச் சொந்தமான, 12 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது' என்று, ராணுவ அமைச்சர் அந்தோணி நேற்று லோக்சபாவில் தெரிவித்தார்.
லோக்சபாவில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, ராணுவ அமைச்சர் அந்தோணி பதிலளிக்கையில்,'நாடுமுழுவதும், ராணுவத்திற்கு 17 லட்சம் ஏக்கர் நிலம் சொந்தமாக உள்ளது. இதனால், நாட்டில் அதிகளவு நிலம் வைத்திருக்கும் உரிமையாளராக, ராணுவம் திகழ்கிறது. இதில், ராணுவத்திற்குச் சொந்தமான, 12 ஆயிரத்து 326 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, 862 வழக்குகள் பல்வேறு கோர்ட்டுகளில் உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் மிக அதிக அளவாக, 3 ஆயிரத்து 80 ஏக்கர் நிலமும், அடுத்ததாக, மத்தியப்பிரதேசத்தில் ஆயிரத்து 491 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன' என்றார்.


