/உள்ளூர் செய்திகள்/தேனி/டாஸ்மாக் மதுபாருக்குபொதுமக்கள் எதிர்ப்புடாஸ்மாக் மதுபாருக்குபொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் மதுபாருக்குபொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் மதுபாருக்குபொதுமக்கள் எதிர்ப்பு
டாஸ்மாக் மதுபாருக்குபொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 06, 2011 10:30 PM
தேனி:தேனி சடையால் கோயில் தெருவில் டாஸ்மாக் மதுபார் அமைக்க அப்பகுதி
மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அவர்கள் கலெக்டர் பழனிசாமியிடம்
கொடுத்துள்ள மனு: தேனி சடையால் கோயில் தெருவில் அமைக்கப்பட்டிருந்த
டாஸ்மாக் கடை பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது.
தற்போது இங்கு டாஸ்மாக் மதுபானக்கடை அமைக்க சிலர் முயற்சி செய்து
வருகின்றனர்.11 அடி அகலம் உள்ள தெருவில் டாஸ்மாக் பார் அமைத்தால்
பொதுமக்கள், பள்ளி மாணவிகள், பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள்.ரோட்டை
ஆக்கிரமித்து டாஸ்மாக் பார் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், என
தெரிவித்துள்ளனர்.


