/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கக்கூட்டம்ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கக்கூட்டம்
ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கக்கூட்டம்
ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கக்கூட்டம்
ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர் சங்கக்கூட்டம்
ADDED : ஆக 09, 2011 01:41 AM
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி., ஆட்டோ தொழிலாளர் சங்க நகர, மாவட்ட
பேரவை கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் ஆறுமுகம், ஜான்பீட்டர், சாமிநாதன், முனியாண்டி ஆகியோர்
முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணன் கொடியை
ஏற்றி வைத்தார். கும்பகோணம் நகர தலைவர் மனோகரன் வரவேற்றார். மாவட்ட
செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் மூர்த்தி ஆகியோர் ஆண்டறிக்கை
சமர்ப்பித்தனர். ஜோசப் தீர்மானங்களை முன் மொழிந்தார்.ஏ.ஐ.டி.யூ.சி., மாநில
ஆட்டோ சம்மேளன பொது செயலாளர் சேஷசயனம் பேசினார்.ஏ.ஐ.டி.யூ.சி., மாநில துணை
தலைவர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் தில்லைவனம், துணை தலைவர் சந்தானம்,
போக்குவரத்து கழக பொது செயலாளர் மதிவாணன், பொருளாளர் கோவிந்தராஜன், உட்பட
பலர் பங்கேற்று பேசினர். முன்னதாக தஞ்சை ஈஸ்வரி நகரில் இருந்து பேரணியாக
சென்றனர். பேரணியை மாநில துணை தலைவர் சந்திரகுமார் துவக்கி வைத்தார்.
இதில், 130 ஆட்டோக்கள் பங்கேற்றது.


