Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி தூத்துக்குடியில் இன்று துவக்கம்

மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி தூத்துக்குடியில் இன்று துவக்கம்

மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி தூத்துக்குடியில் இன்று துவக்கம்

மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டி தூத்துக்குடியில் இன்று துவக்கம்

ADDED : ஆக 12, 2011 12:52 AM


Google News

தூத்துக்குடி : மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் இன்று (12ம் தேதி) தூத்துக்குடியில் துவங்குகிறது.

பியர்ல் சிட்டி பீச் வாலிபால் குழு சார்பில் மாவட்ட அளவிலான பீச் வாலிபால் போட்டிகள் இன்று முதல் 14ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

தூத்துக்குடி செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடக்கும் இந்த போட்டியில் மாணவியர் பிரிவில் ஹோலிகிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, சுப்பையாவித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விக்டோரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பி.எம்.சி மேல்நிலை ப்பள்ளி அணியினரும், மாணவர்கள் பிரிவில் புனித லசால் மேல்நிலைப்பள்ளி, புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி, கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி, ஸ்பிக் மேல்நிலைப்பள்ளி, செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி, துறைமுக மேல்நிலைப்பள்ளி, எஸ்ஏவி மேல்நிலைப்பள்ளி அணியினரும் கலந்து கொள்ள உள்ளனர்.



இன்று மாலை நடக்கும் துவக்க விழாவிற்கு மாவட்ட வாலிபால் சங்க தலைவர் உதய சங்கர் தலைமை வகிக்கிறார். தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமை இன்ஜி.,அர்த்தநாரி போட்டியை துவக்கி வைக்கிறார். விழாவில் செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஆண்ட்ருடிரோஸ், முதல்வர் ஆல்பர்ட் ஜோசப், வஉசி துறைமுக போர்ட் கவுன்சில் செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை பியர்ல் சிட்டி வாலிபால் குழுவின் புரவலர் திவாகர், தலைவர் ஜான் வசீகரன், செயலாளர் ஸ்டீபன் தியாகராஜன், துணை செயலாளர் ரவிகாந்த், பொருளாளர் பவு ன்ராஜ், ஒருங்கிணைப்பாளர் குருசாமி ஆகியோர் செய்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us