தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
தெருவாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு
ADDED : ஆக 12, 2011 01:52 AM
ராமநாதபுரம்:உள்ளாட்சி தேர்தலுக்காக தெருவாரியாக வாக்காளர் விபரம்
சேகரிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல்
தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலின் போது உள்ள
வாக்காளர்கள், வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, தெரு
வாரியாக வரிசை எண் அடிப்படையில் வாக்காளர்கள், பிரிக்கப்பட்டு வருகின்றனர்.
இவை ஆன்லைனில் பதியப்பட்ட பிறகு, குறிப்பிட்ட தெருவின் பெயரை பதிந்தால்,
அந்த தெருவில் எத்தனை வாக்காளர்கள், அவர்களின் முழு விபரம் குறித்து தெரிய
வரும். வார்டு வாரியாகவும் விபரங்களை அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு வகை
வாரியாக பிரிக்கப்பட்டு
வாக்காளர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், மன்ற அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.


