Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆட்டோ டிரைவரை விரட்டி கத்தியால் குத்திய மர்ம கும்பல்

ஆட்டோ டிரைவரை விரட்டி கத்தியால் குத்திய மர்ம கும்பல்

ஆட்டோ டிரைவரை விரட்டி கத்தியால் குத்திய மர்ம கும்பல்

ஆட்டோ டிரைவரை விரட்டி கத்தியால் குத்திய மர்ம கும்பல்

ADDED : ஆக 12, 2011 10:54 PM


Google News
ஓசூர்: ஓசூர் காந்திசிலை அருகே பட்டபகலில் மர்ம நபர்கள் ஆட்டோ டிரைவரை சாலையில் ஓட ஓட விரட்டி கொலை செய்ய கத்தியால் குத்திய சம்பவதால் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.ஓசூர் வாணியர் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சீனிவாசன்(35). இவர் நேற்று மதியம் காந்தி சிலை அருகே நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், சீனிவாசனை கொலை செய்யும் எண்ணத்தோடு ஆவேசத்துடன் கத்தியால் குத்த ஓடஓட விரட்டினர்.

சீனிவாசன் அந்த நபர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க காந்தி சிலை அருகே ஒவ்வொரு சாலையிலும் ஓடினார். அந்த மர்ம நபர்கள் அவரை விடாமல் துரத்தி, காந்தி சிலை அருகே வந்த போது அவரை சுற்றி வளைத்து பிடித்து சரமாரியாக குத்தினர்.இச்சம்பவத்தால் காந்தி சிலை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பொதுமக்கள் அறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் நின்ற போலீஸார் சம்பவத்தை பார்த்து அங்கு ஓடி வந்தனர். அதனால், மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பியோடிவிட்டனர். கத்தி குத்தப்பட்டு தலை, கை மற்றும் உடல் முழுவதும் படுகாயம் அடைந்து கீழே சரிந்து விழுந்த சீனிவாசனை போலீஸார் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us