பார்லி.யில் தனிநபர் மசோதா: பா.ஜ. எம்.பி. வருண் திட்டம்
பார்லி.யில் தனிநபர் மசோதா: பா.ஜ. எம்.பி. வருண் திட்டம்
பார்லி.யில் தனிநபர் மசோதா: பா.ஜ. எம்.பி. வருண் திட்டம்
UPDATED : ஆக 17, 2011 08:55 AM
ADDED : ஆக 17, 2011 06:45 AM

புதுடில்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தியதால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காந்தியவாதி அன்னா ஹசாரேவின் கனவு மசோதாவான ஜான்லோக்பால் மாசோதவை, பார்லிமென்டில் தனிநபர் மசோதாவாக கொண்டுவரப்போவதாக , பா.ஜ.எம்.பி.வருண் தெரிவித்துள்ளார்.
உ.பி.மாநிலம் பிலிபித் தொகுதி எம்.பி.யான வருண் கூறியதாவது: ஊழலை ஒழித்துக்கட்ட வலுவான ஜான்லோக்பால் தேவை என்பதனை காந்தியவாதி அன்னா ஹசாரே வலியுறுத்தி அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். அவரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது நாட்டிற்கு நேர்ந்துள்ள பெரும் அவமானம். இன்று கோடிக்கணக்கான மக்களிடம் லோக்பால் மசோதா குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆளும்கட்சியினரின் இந்த அடக்குமுறையால் ஹசாரேவை இன்று சிறையில் அடைக்கலாம். ஆனால் அவர் தொடங்கியுள்ள அறப்போராட்டம் தொடரும். ஹசாரேயி்ன் கனவு மசோதாவான ஜான்லோக்பால் சட்டத்தை, நான் பார்லிமென்டில் தனிநபர் மசோதாவாக கொண்டுவர உள்ளேன். இந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள் இந்த மசோதாவை தாக்கல் செய்வேன். பொதுவாக அமைச்சர் அல்லாத ஒரு எம்.பி. மட்டும் கொண்டுவரும் தனிநபர் மசோதாவானது பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்படுவது மிகவும் அரிதானது. இது மறைமுகமாக மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தினை பாதிப்பதாகும் என்ற கருத்து நிலவுகிறது.


