/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேந்திரிய பள்ளிகளுக்கான கிரிக்கெட் "சென்னை கிளஸ்டர்' அணி சாம்பியன்கேந்திரிய பள்ளிகளுக்கான கிரிக்கெட் "சென்னை கிளஸ்டர்' அணி சாம்பியன்
கேந்திரிய பள்ளிகளுக்கான கிரிக்கெட் "சென்னை கிளஸ்டர்' அணி சாம்பியன்
கேந்திரிய பள்ளிகளுக்கான கிரிக்கெட் "சென்னை கிளஸ்டர்' அணி சாம்பியன்
கேந்திரிய பள்ளிகளுக்கான கிரிக்கெட் "சென்னை கிளஸ்டர்' அணி சாம்பியன்
ADDED : ஆக 21, 2011 11:54 PM
சூலூர் : சூலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்த, மண்டல கிரிக்கெட்
போட்டியில், 'சென்னை கிளஸ்டர்' அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சென்னை
மண்டல கேந்திரிய பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள், சூலூர்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடந்தன. 'லீக்' மற்றும் 'நாக் அவுட்'
முறையில் நடந்த போட்டியில், பத்து அணியினர் பங்கேற்றனர். இறுதிப்போட்டியில்
சென்னை கிளஸ்டர் அணியினரும், திருவனந்தபுரம் அணியினரும் மோதின; சென்னை
அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர். பரிசளிப்பு விழாவில் பள்ளி முதல்வர்
ராஜேஸ்வரி வரவேற்று பேசினார். வெற்றி பெற்ற அணியினருக்கு இந்திய தடகள
பயிற்சியாளர் நிஜாமுதீன் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி பேசுகையில்,
''விளையாட்டில் வெற்றி மற்றும் தோல்வி சகஜம். தோல்வி கண்டு துவண்டு
விடாமல், வெற்றி பெற திட்டமிட்டு கடுமையான பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
விளையாட்டில் நிலைத்து நிற்க நல்ல உடல் தகுதி தேவை. வீரர்களுக்கு இடையே
வேகம் மற்றும் விவேகம் இருக்க வேண்டும்; துரித முடிவு எடுக்கும் மன உறுதி
வேண்டும்,'' என்றார். கோபிநாத்,வினித்ராஜ், அஸ்வின், அபிஷேக் மகுர், ஜங்கு
தபா, பாலவிக்னேஷ், சுதாகரன் சீனிவாஸ்,ரோகித்குமார், சுஜித், நிகில்
நாராயணன், ஆசிப் சலாம், விஸ்வேஸ்வர் சுரேஷ், ஜிதேஷ் யாதவ், சிவா, அஜய்,
அரவிந்தன் உள்ளிட்ட 16 பேர், தேசிய கேந்திரிய அணிக்கு தேர்வு
செய்யப்பட்டனர். எஸ்.என்.ஆர்., கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வடிவேல், கோவை
கிரிக்கெட் சங்கத்தின் சரத்குமார், சூலூர் கேந்திரிய வித்யாலயா உடற்கல்வி
ஆசிரியர் சந்திரசேகர் ஆகியோர் தேசிய அணிக்கான வீரர்களை தேர்வு செய்தனர்.


