தேசிய அடையாள அட்டை போட்டோ எடுக்கும் பணி
தேசிய அடையாள அட்டை போட்டோ எடுக்கும் பணி
தேசிய அடையாள அட்டை போட்டோ எடுக்கும் பணி
ADDED : ஆக 22, 2011 12:36 AM

தாண்டிக்குடி : தாண்டிக்குடியில் தேசிய அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்கும் பணி நடந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் தாண்டிக்குடி, பூண்டியில் இப்பணி சில தினங்களாக நடக்கிறது. ஸ்டேட் பாங்க் மூலம் மேக்ரோடெக் நிறுவனத்தினர் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய அடையாள அட்டை போட்டோ எடுக்கும் பணியின் போது கைரேகை பதிவு, இரு கண்கள் மட்டும் பதிவு செய்தல், முகவரி, சான்றிதழ் சரிபார்த்து சம்மந்தபட்டவரின் போட்டோ எடுத்து அதற்கான ரசீது வழங்கப்படுகிறது. ஸ்டேட் பாங்க் புதிய கணக்கு செயல்படுத்தும் பணியும் இதனுடன் நடந்து வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர். மக்கள் தொகை அடிப்படையில் காலக்கெடு நிர்ணயமின்றி தொடர்ந்து போட்டோ எடுக்கும் பணி நடக்கும். பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், 'இரண்டு மாதங்களில் தேசிய அடையாள அட்டை அஞ்சல் மூலம் சம்மந்தபட்ட நபர்களுக்கு கிடைக்கும்'.


