/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பாளை. யில் 24ம் தேதிதடகளம், நீச்சல் போட்டிகள்பாளை. யில் 24ம் தேதிதடகளம், நீச்சல் போட்டிகள்
பாளை. யில் 24ம் தேதிதடகளம், நீச்சல் போட்டிகள்
பாளை. யில் 24ம் தேதிதடகளம், நீச்சல் போட்டிகள்
பாளை. யில் 24ம் தேதிதடகளம், நீச்சல் போட்டிகள்
ADDED : ஆக 22, 2011 02:31 AM
திருநெல்வேலி:பாளை.
அண்ணா விளையாட்டு மைதானத்தில் வரும் 24ம்தேதி தடகளம்,
நீச்சல் போட்டிகள் நடக்கிறது.விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்
தடகளம், நீச்சல் போட்டிகளை ஊக்குவிக்கும் சிறப்புத்திட்டத்தின் கீழ்
24ம்தேதி காலை 8 மணி முதல் போட்டிகள் நடக்கிறது. ஆண்களுக்கு
ஓட்டப்போட்டிகள், 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல்,
மும்முறை தாண்டுதல், போல்வால்ட், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல்,
சங்கிலிக்குண்டு எறிதல், நீச்சல் போட்டிகள், பெண்களுக்கு ஓட்டப்போட்டிகள் ,
400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், மும்முறை
தாண்டுதல், போல்வால்ட், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், நீச்சல் போட்டிகள்
நடக்கிறது.செப்டம்பர் 23ம்தேதி, அக்டோபர் 21ம்தேதியும் போட்டிகள்
நடக்கிறது. ஒரு பள்ளி, கல்லூரி, நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும்
இருவர் கலந்து கொள்ளலாம். தடகளத்தில் ஒரு நபர் 3 போட்டிகளிலும், நீச்சல்
போட்டியில் ஒரு நபர் 2 போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம். ஒவ்வொரு
போட்டிக்கும் 8 பேர் வீதம் 496 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு மாநில
போட்டிக்கு அரசு செலவில் அழைத்துச்செல்லப்படுவர்.போட்டியில் கலந்து
கொள்பவர்கள் நாளை(23ம்தேதி) மதியம் 2 மணிக்கு முன் மாவட்ட விளையாட்டு
அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். 24ம்தேதி காலை 7 மணிக்கு
முன்பு மைதானத்தில் ஆஜராக வேண்டும்.இத்தகவலை மாவட்ட விளையாட்டு அலுவலர்
சேவியர் ஜோதிசற்குணம் தெரிவித்தார்.