/உள்ளூர் செய்திகள்/திருச்சி/திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்ததில் சாவு; ஒருவர் கைதுதிருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்ததில் சாவு; ஒருவர் கைது
திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்ததில் சாவு; ஒருவர் கைது
திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்ததில் சாவு; ஒருவர் கைது
திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்ததில் சாவு; ஒருவர் கைது
ADDED : ஆக 25, 2011 01:49 AM
மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடித்து உதைத்தில் சிகிச்சை பலனின்றி இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மண்ணச்சநல்லூர் அருகே நெ.2 கரியமாணிக்கத்தை சேர்ந்தவர் பிரகலாதன்(31).
திருமணமான இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளன. திருட்டுப் பழக்கம் உள்ளவரான இவர் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த 20ம்தேதி மாலை 6 மணிக்கு வாத்தலையைச் சேர்ந்த பரமசிவம்(47) என்பவர் பிரகலாதனை மது அருந்தலாம் எனக்கூறி ஹோண்டா டூவீலரில் அழைத்துச் சென்றுள்ளார். முக்கொம்பு பாலம் அருகே சென்றவுடன் இன்னொருவருடன் சேர்ந்து கொண்டு பரமசிவம், பிரகலாதனை திருட்டில் ஈடுபடுவாயா? என கேட்டு அடித்து உதைத்துள்ளார்.
படுகாயம் அடைந்த பிரகலாதனை முக்கொம்பு பயணியர் மாளிகை அருகே போட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். அவ்வழியே வந்தவர்கள் காயத்துடன் கிடந்த பிரகலாதனை ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரகலாதன் சிகிச்சைப் பலனின்றி நேற்று முன்தினம் மாலை ஏழு மணியளவில் உயிரிழந்தார். ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசன், வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதன், எஸ்.ஐ., ஜெயசித்ரா வழக்குப்பதிந்து பரமசிவத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள இன்னொருவரை தேடி வருகின்றனர்.


