கைதிகள் உணவை ருசித்த கலெக்டர் சகாயம் : மதுரை சிறையில் இரண்டரை மணி நேரம் ஆய்வு
கைதிகள் உணவை ருசித்த கலெக்டர் சகாயம் : மதுரை சிறையில் இரண்டரை மணி நேரம் ஆய்வு
கைதிகள் உணவை ருசித்த கலெக்டர் சகாயம் : மதுரை சிறையில் இரண்டரை மணி நேரம் ஆய்வு
மதுரை : மதுரை சிறையில் நேற்று பகல் 12.40 மணிக்கு கலெக்டர் சகாயம் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தண்டனை கைதிகள் உள்ள 'பிளாக்'கிற்கு சென்று, கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். 'இக்கட்டடம் மோசமாக இருப்பதால், இடித்துவிட்டு புதுக்கட்டடம் கட்டலாம். மேலும், என்னென்ன அடிப்படை வசதிகள் தேவை என்று எனக்கு அறிக்கை கொடுங்கள். அதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன்' என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின், சமையல் அறைக்கு சென்றார்.
கைதிகளுக்கான சோறு, கீரை குழம்பு, பீட்ரூட் தயார் நிலையில் இருந்தது. அதை சாப்பிட்ட சகாயம், 'டேஸ்ட் நல்லா இருக்கு' என சர்டிபிகேட் தந்தார். பின், தண்டனை கைதிகளின் குறைகளை கேட்டறிந்தார். பெரும்பாலானோர், தங்களுக்கு 'பரோல்' கிடைப்பதில்லை; தண்டனை காலம் முடிந்தும் சிறையில் இருக்கிறோம். உடல்நலக்கோளாறால் சிரமப்படுகிறோம், போன் வசதி வேண்டும். உறவினர்களை சந்திக்கும் இடத்தில் கூச்சல் அதிகம் இருக்கிறது' என்று புலம்பினர். ஆறுதல் கூறிய சகாயம், 'என்னால் முடிந்ததை செய்கிறேன்', என்றார். அதற்குள் மணி மாலை 3.40 ஆகிவிட்டதால், 'இன்னும் ரிமாண்ட் பகுதி பார்க்கவில்லை. அடுத்த முறை வரும்போது அங்கு ஆய்வு செய்கிறேன்' என்றுக்கூறி, புறப்பட்டார். கலெக்டர் வருவதற்கு முன்னதாக, தி.மு.க.,வினரை முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ., சக்ரபாணி சந்தித்தனர். பின், ஐகோர்ட் உத்தரவுபடி, மாலை 5.40 மணிக்கு அடிப்படை வசதிகள் குறித்து நீதிபதி பாஸ்கரன் ஆய்வு செய்தார். இந்த அறிக்கையை ஆக.,29ல் தாக்கல் செய்கிறார்.


