/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/புவிவெப்பமயமாவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழாபுவிவெப்பமயமாவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழா
புவிவெப்பமயமாவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழா
புவிவெப்பமயமாவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழா
புவிவெப்பமயமாவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் விழா
ADDED : ஆக 28, 2011 01:02 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் லயன்ஸ் கிளப் மற்றும் டச் அமைப்பு சார்பில் புவி வெப்பமயமாவதைத் தடுக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.
சர்வதேச லயன்ஸ் சங்க தலைவர் குன்டாம் ஆலோசனையின் படி புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காகவும், கின்னஸ் சாதனை படைக்கவும், லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் விதமாகவும் உலகம் முழுவதம் 40லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டது.
இதன்படி இந்தியாவில் 10 லட்சம் மரக்கன்றுகளும், தமிழகத்தில் 2லட்சம் மரக்கன்றுகளும் நடுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான விழா நடந்தது.
தூத்துக்குடி புனித மரியன்னை பெண்கள் கல்லூரி சார்பில் தத்தெடுக்கப்பட்ட சில்வர்புரம் மற்றும் பாலையாபுரத்தில் தூத்துக்குடி லயன் சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவில் புனித மரியன்னை கல்லூரி முதல்வர் டெக்லா தலைமை வகித்தார். விழாவில் லயன்ஸ் சங்க தலைவர் பொன்சீலன், எம்பவர் சங்கர், இந்திய செஞ்சிலுவை சங்க பொருளாளர் வன்னிய ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து சில்வர்புரம் மற்றும் பாலையாபுரத்தில் வீட்டுக்கு ஒரு மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவில் லயன்ஸ் கிளப் முன்னாள் கவர்னர் அருணாச்சலம், செயலர் மனோகரன், பொருளாளர் பாஸ்கரன், ஷாஜஹான், ராஜேந்திரன், பீட்டர்ஜெபராஜ், சீனிவாசன், லயன்ஸ் கிளப் தலைவி சகாயட்டா, செயலர் கீதாரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


