Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/எஸ்.பி., ஆஃபீஸ் வளாகத்தில் குப்பை பூங்காவாக மாற்றி பராமரிக்கப்படுமா?

எஸ்.பி., ஆஃபீஸ் வளாகத்தில் குப்பை பூங்காவாக மாற்றி பராமரிக்கப்படுமா?

எஸ்.பி., ஆஃபீஸ் வளாகத்தில் குப்பை பூங்காவாக மாற்றி பராமரிக்கப்படுமா?

எஸ்.பி., ஆஃபீஸ் வளாகத்தில் குப்பை பூங்காவாக மாற்றி பராமரிக்கப்படுமா?

ADDED : ஆக 28, 2011 01:19 AM


Google News

ஈரோடு: எஸ்.பி., அலுவலக வளாகத்தில், குப்பை குவிக்கப்படும் பகுதியை, பூங்காவாக மாற்றி பராமரிக்க வேண்டும்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் எஸ்.பி., அலுவலகம் செயல்படுகிறது.

இதே வளாகத்தில், டி.எஸ்.பி., அலுவலகம், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகம், போலீஸ் கட்டுப்பாடு அறை, மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மோப்ப நாய்ப்படை, ஊர்க்காவல் படை அலுவலகம் உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. எஸ்.பி., வளாகத்தில் இரு புறமும் காலியாக உள்ள இடங்களில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. ஒரு பகுதியில் முள்கம்பி போடப்பட்டு, யாரும் உள்ளே நுழையாதவாறு பாதுகாக்கப்பட்டு உள்ளது. அந்த இடம் குப்பை போட்டு வைக்கும் இடமாக மாறியுள்ளது. மரங்களில் இருந்து கீழே விழம், இலைகள் எல்லாம் அங்கேயே சேகரிக்கப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர்.



புகார் கொடுக்க வருபவர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட்டவர்கள், அமர இடமில்லாமல் அங்குள்ள சிறிய திட்டில்தான் அமர்கின்றனர். அதிலும், புதிதாக துவக்கப்பட்டுள்ள, நில மோசடி தடுப்பு பிரிவுக்கு தினமும் 20க்கும் மேற்பட்டோர் மனு கொடுக்க வருகின்றனர். இப்பிரிவில் நடக்கும் தொடர் விசாரணையில் பங்கேற்க, குறைந்தபட்சம் 50 பேராவது வருகின்றனர். நீண்ட தொலைவில் இருந்து வருபவர்கள், அமரக்கூட இடமின்றி தவிக்க வேண்டியுள்ளது. குப்பை கொட்டும் இடத்தை பூங்காவாக மாற்றி, இருக்கைகள் அமைத்து, தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us