/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விசைத்தறி "ஸ்டிரைக்'; காடா உற்பத்தி பாதிக்கும்விசைத்தறி "ஸ்டிரைக்'; காடா உற்பத்தி பாதிக்கும்
விசைத்தறி "ஸ்டிரைக்'; காடா உற்பத்தி பாதிக்கும்
விசைத்தறி "ஸ்டிரைக்'; காடா உற்பத்தி பாதிக்கும்
விசைத்தறி "ஸ்டிரைக்'; காடா உற்பத்தி பாதிக்கும்
ADDED : ஆக 30, 2011 12:55 AM
பல்லடம் : விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 100 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், தினமும் 36 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.பல்லடம் பகுதியில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் பொது உறுப்பினர் கூட்டம், மணிவேல் மஹாலில் நேற்று நடந்தது. தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி வரவேற்றார். பொருளாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, நியாயமான கூலி உயர்வை பெறுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 100 சதவீதம் கூலி உயர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, இன்று முதல் (30ம் தேதி) காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
சங்க தலைவர் வேலுசாமி பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், அவினாசி, மங்கலம், தெக்கலூர், புதுப்பாளையம், பெருமாநல் லூர், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விசைத்தறிகள் நாளை (இன்று) முதல் இயங்காது. திருப்பூர் மாவட்டத்தில், மொத்தம் 1.20 லட்சம் விசைத்தறிகளில் கூலிக்கு நெசவு செய்யப்படுகிறது. தினமும் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.20 லட்சம் மீட்டர் காடா துணி உற்பத்தியாகிறது.தற்போதைய விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்கள் 100 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும். அத்தகைய கோரிக்கையை வலியுறுத்தி, நான்கு கட்டங்களாக பேச்சு நடந்தும், சுமூக முடிவு எட்டப்படவில்லை. அடுத்தக்கட்டமாக, 5ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையிலும், நல்ல முடிவு கிடைக்கும் என கூற முடியாது.கூலி உயர்வு பெறாமல், விசைத்தறிகளை இயக்க முடியாத காரணத்தால், வேலை நிறுத்தம் துவங்குகிறது. இதன் மூலமாக, தினமும் 36 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்படும். எனவே, இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு, 100 சதவீத கூலி உயர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.இணை செயலாளர் பாலு நன்றி கூறினார்.அவிநாசி: அவிநாசி வட்டார விசைத்தறி தொழிலாளர் சங்க கூட்டுக்கமிட்டி அவசர ஆலோசனை கூட்டம், நேற்று மாலை மா.கம்யூ., அலுவலகத்தில், சி.ஐ.டி.யு., மாவட்ட பொது செயலாளர் முத்துசாமி தலைமையில் நடந்தது. ஏ.ஐ.டி.யு.சி., மாநிலக்குழு உறுப்பினர் இசாக் வரவேற்றார்.எல்.பி.எப்., ஒன்றிய செயலாளர் தேவராஜன், தே.மு.தி.க., தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பாலதண்டபாணி, நெசவாளர் பிரிவு செயலாளர் வேலுசாமி, எம்.எல்.எப்., செயலாளர் நடராஜ் ஆகியோர் பேசினர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து முத்துசாமி கூறுகையில், ''விசைத்தறி தொழிலாளர்களுக்கு 100 சதவீத கூலி உயர்வை வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்து, நாளை (இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி, சேவூர், தெக்கலூர், வஞ்சிபாளையம் உள்ளிட்ட விசைத்தறிகள் உள்ள பகுதிகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 'ஸ்டிரைக்'கில் ஈடுபடுகின்றனர்,'' என்றார்.


