/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு தீவிரம்உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு தீவிரம்
உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பு தீவிரம்
ADDED : செப் 03, 2011 11:55 PM
திருநெல்வேலி : உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடாக வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடத்தப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடு ஆயத்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தீவிரமாக நடந்து வருகிறது. கிராமப்புற உள்ளாட்சிகளில் பஞ்., தலைவர், பஞ்., கவுன்சிலர், பஞ்.,யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்., கவுன்சிலர் ஆகிய 4 உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. ஓட்டுச் சீட்டு மூலம் இத்தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளை பொறுத்தவரை டவுன் பஞ்., தலைவர், டவுன் பஞ்., கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், மாநகராட்சி மேயர், மாநகராட்சி கவுன்சிலர் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு நேரடி தேர்தல் முறை அமல்படுத்தப்படுவதால் இப்பகுதிகளில் இரண்டு ஓட்டுகள் முறை அமல்படுத்தப்படுகிறது. நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடக்கிறது. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் 1.1.2011ஐ அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலை சரி செய்யும் பணி நடந்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிய அலுவலர்கள் இந்த பட்டியலை சரி பார்த்து வருகின்றனர். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 2வது நாளாக இந்த சரி பார்ப்பு பணி நடந்தது. தொடர்ந்து இப்பணி முடிவுற்றதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், மாற்றம் செய்தல், நீக்கம் செய்தல் போன்றவற்றிற்கும் கால அவகாசம் வழங்கப்படும். ஏற்கனவே எலக்ட்ரானிக் இயந்திரங்கள் தொடர்பாக தலைமை பயிற்சியாளர்களுக்கு உரிய பயிற்சிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு தொகுதி வாரியாக அலுவலர்களுக்கு இப்பயிற்சிகள் நடத்தப்படுகிறது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் குறித்த கணக்கெடுப்பும் நடந்து முடிந்துள்ளது. இந்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியும் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் சூழ்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விருப்ப மனுக்களை அனைத்து கட்சியினரும் 'பிசி'யாக பெற்று வருகின்றனர். விரைவில் தேர்தல் தேதி அறிவித்ததும் உள்ளாட்சி தேர்தல் களம் மேலும் 'சூடு' பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


