/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/சைக்கிள்- பைக் மோதல் வாலிபர் பரிதாப பலிசைக்கிள்- பைக் மோதல் வாலிபர் பரிதாப பலி
சைக்கிள்- பைக் மோதல் வாலிபர் பரிதாப பலி
சைக்கிள்- பைக் மோதல் வாலிபர் பரிதாப பலி
சைக்கிள்- பைக் மோதல் வாலிபர் பரிதாப பலி
ADDED : செப் 06, 2011 01:57 AM
ப.வேலூர்: ப.வேலூர் அருகே சைக்கிள் மீது, பைக் மோதிய விபத்தில் வாலிபர்
ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ப.வேலூர் அரகே வீரணம்பாளையத்தை சேர்ந்தவர்
சுரேஷ் (23). அவர், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில், ப.வேலூரில்
இருந்து வீரணம்பாளையத்துக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக்கில் சென்றுள்ளார்.
தண்ணீர்பந்தல் மேடு அருகே சென்ற போது, முன்னால் சென்ற சைக்கிள் மீது
மோதியுள்ளார். அந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே
பலியானார். சைக்கிளில் சென்ற ராஜா, குணச்சந்திரன் நாமக்கல்லில் உள்ள
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம்
தொடர்பாக, ப.வேலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.


