Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

PUBLISHED ON : செப் 07, 2011 12:00 AM


Google News

பிராணிகள் வதை தடுப்பு



மத்திய அரசின் சுற்றுப்புறச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சக கட்டுப்பாட்டில், பிராணிகள் நல வாரியம் உள்ளது.

மத்திய குற்றவியல் சட்டத்தில், குற்றங்களாக கூறியுள்ளவை எவற்றுக்குமே தண்டனை வழங்கப்படுவதில்லை.கால்நடைகளை தன்னிச்சையாக அலைய விடுவதே தண்டனைக்குரிய குற்றமாகும். இன்று நகரச் சாலைகள், மார்க்கெட்டுகளில் போக்குவரத்து நெரிசலுக்கு, தன்னிச்சையாக அலையும் இந்தக் கால்நடைகளே காரணமாகும். அதிக அளவில் ஆடு, மாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்வது, பாதுகாப்பின்றி செல்வது, ஆடிப்பண்டிகை, தீபாவளி, ரம்ஜான் போன்ற விசேஷ நாட்களில் அரசு அனுமதியின்றி பொது இடங்களில் ஆடுகளை அறுப்பது, மாட்டு வண்டியில் அதிக பாரம் ஏற்றுவது, அபூர்வ விலங்குகள், அவற்றின் தோல்களை அனுமதி இன்றி வைத்திருப்பது, விலங்குகளை சண்டையிட வைத்தல் போன்றவை மத்திய குற்றவியல் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.



தகவல் சுரங்கம்



மோனோ ரயில்



சென்னையில், மெட்ரோ ரயில் எனப்படும் பாதாள ரயில்களுக்குப் பதிலாக, மோனோ ரயில் எனப்படும் உயர்த்தப்பட்ட ரயில் பாதை அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. உலகில் தற்போது 20 நாடுகளில் மோனோ ரயில் பாதை இருக்கிறது. மெட்ரோ ரயில் பாதையோடு ஒப்பிடுகையில், மோனோ ரயில் பாதையை அமைக்க செலவு குறைவாகும். மோனோ ரயில் பாதை அமைக்க அதிகளவு நிலம் தேவைப்படுவது இல்லை. எனவே மக்களை அப்புறப்படுத்தும் பிரச்னைகள் இல்லை. ரயில்வே ஸ்டேஷன்கள் கட்ட, மோனோ ரயிலுக்கு அதிக இடம் தேவை இல்லை. ஆனால் மெட்ரோ ரயிலுடன் ஒப்பிடுகையில், மோனோ ரயிலில் குறைந்த அளவு பயணிகளே பயணிக்க முடியும். அதிக எண்ணிக்கையில் மோனோ ரயில்களை இயக்குவதன் மூலமாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us