/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/"தினமலர்' இதழை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்"தினமலர்' இதழை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"தினமலர்' இதழை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"தினமலர்' இதழை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
"தினமலர்' இதழை எரித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 07, 2011 12:04 AM
காரைக்குடி : காஞ்சிபுரத்தில், தீக்குளித்து பலியான செங்கொடி குறித்து, தினமலரில் வெளியான செய்தியை கண்டித்து, காரைக்குடியில் கல்லூரி மாணவர்கள் 'தினமலர் இதழை' எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.கோவிலூரில் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது.
இக்கல்லூரியை சேர்ந்த மாணவர்கள், அங்கிருந்து ஊர்வலமாக, காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் வந்தனர்.பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டணையை ரத்து செய்ய கோரி கோஷம் எழுப்பினர். பின், தினமலர் ஒழிக என கோஷமிட்டு, கையில் இருந்த நாளிதழை தீயிட்டு எரித்தனர். போலீசார் மாணவர்களிடமிருந்த நாளிதழை கைப்பற்றினர்.


