/உள்ளூர் செய்திகள்/திருச்சி/வீட்டின் செப்டிக் டேங் தொட்டியில் எலக்ட்ரீஷியன் பிணம் கண்டெடுப்புவீட்டின் செப்டிக் டேங் தொட்டியில் எலக்ட்ரீஷியன் பிணம் கண்டெடுப்பு
வீட்டின் செப்டிக் டேங் தொட்டியில் எலக்ட்ரீஷியன் பிணம் கண்டெடுப்பு
வீட்டின் செப்டிக் டேங் தொட்டியில் எலக்ட்ரீஷியன் பிணம் கண்டெடுப்பு
வீட்டின் செப்டிக் டேங் தொட்டியில் எலக்ட்ரீஷியன் பிணம் கண்டெடுப்பு
ADDED : செப் 07, 2011 02:26 AM
மணப்பாறை: மணப்பாறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் செப்டிக் டேங்
தொட்டியில் எலக்ட்ரீசியன் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை
செய்கின்றனர்.
மணப்பாறை அருகே பூங்குடிப்பட்டியைச் சேர்ந்த வீரன் மகன்
எலக்ட்ரீசியன் ராமச்சந்திரன்(21). இவர் மணப்பாறை பட்டியைச் சேர்ந்த
எலக்ட்ரீசியன் கான்ட்டிராக்டர் ரவிச்சந்திரன் என்பவரிடம் உதவியாளராக
பணிபுரிந்து வந்தார். பூ மாலைப்பட்டியில் தயாளன் என்பவரது புதிய கட்டுமானப்
பணி நடந்து வருகிறது. அங்கு 12 அடி ஆழமுள்ள செப்டிக் டேங்க் தொட்டியின்
மேல் கட்டப்பட்டுள்ள குளியளறையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு
ராமச்சந்திரன் மட்டும் தனியாக கிரைண்டிங் மெஷின் மூலம் பிளம்பிங்
வேலைபார்த்துள்ளார். நேற்று காலை ராமச்சந்திரன் செப்டிக் டேங்க் தொட்டியின்
உள்ளே மர்மமான முறையில் கையில் கிரைண்டிங் மெஷினுடன் இறந்து கிடந்தார்.
ராமச்சந்திரன் மின்சாரம் தாக்கிதொட்டியினுள் விழுந்து இறந்திருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது. மணப்பாறை இன்ஸ்பெக்டர் (பொ) அதிவீரராம பாண்டியன்
வழக்குப்பதிந்து விசாரணை செய்கிறார்.


