Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/போலி பிளக் விற்றவர் கைது

போலி பிளக் விற்றவர் கைது

போலி பிளக் விற்றவர் கைது

போலி பிளக் விற்றவர் கைது

ADDED : செப் 07, 2011 02:30 AM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூர் நகரில், கம்பெனி பெயரில், போலி பிளக்குகளை விற்ற கடை உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.திருவள்ளூர் ஜே.என்.

சாலையில், எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்திருப்பவர் காசிம் பஷீர் மகன் முகமது யூசூப், 40. இவரது கடையில், தனியார் கம்பெனி ஒன்றின் பெயரில், போலி பிளக்குகள் விற்பனை செய்யப்படுவதாக, வந்த தகவலையடுத்து, அக்கம்பெனியின் மேலாளரான, சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மணிமாறன் என்பவர் நேற்று முன்தினம் திடீர் சோதனை செய்தார்.அப்போது அக்கம்பெனியின் பெயரில், போலி பிளக்குகள் தயாரித்து விற்கப்பட்டது தெரிந்தது. இதுகுறித்து, மேலாளர் மணிமாறன் கொடுத்த புகாரின்பேரில், திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கடை உரிமையாளர் முகமது யூசூப்பை கைது செய்தனர். மேலும், கடையில் இருந்த போலி பிளக்குகளையும் பறிமுதல் செய்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us