Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கல்லூரி மாணவர்கள்திடீர் சாலை மறியல்

கல்லூரி மாணவர்கள்திடீர் சாலை மறியல்

கல்லூரி மாணவர்கள்திடீர் சாலை மறியல்

கல்லூரி மாணவர்கள்திடீர் சாலை மறியல்

ADDED : செப் 08, 2011 03:37 AM


Google News
திண்டிவனம்:திண்டிவனம் அருகே கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த வளாகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சென்னை- திண்டிவனம் மார்க்கமாக செல்லும் சில பஸ்கள் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இங்கு அனைத்து பஸ்களையும் நிறுத்த வலியுறுத்தி நேற்று மாலை 5 மணிக்கு மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திண்டிவனம் டி.எஸ்.பி., குப்புசாமி, இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து மாலை 5.45 மணிக்கு சாலை மறியல் கைவிடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us