Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/குண்டு வைக்க சதி : ஜெர்மனியில் இரண்டு பேர் கைது

குண்டு வைக்க சதி : ஜெர்மனியில் இரண்டு பேர் கைது

குண்டு வைக்க சதி : ஜெர்மனியில் இரண்டு பேர் கைது

குண்டு வைக்க சதி : ஜெர்மனியில் இரண்டு பேர் கைது

ADDED : செப் 08, 2011 11:44 PM


Google News
Latest Tamil News
பெர்லின்: ஜெர்மனியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டியதாக, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள மசூதியில், லெபனான் நாட்டை சேர்ந்தவரும், பாலஸ்தீனத்தை சேர்ந்தவரும் அடிக்கடி சென்று வந்தனர். இவர்கள் ஜெர்மன் குடியுரிமை பெற்றவர்கள். சமீபத்தில் இவர்கள் ரசாயன பொருட்களை அதிகளவில் வாங்கியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்த கடைக்காரர், இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இவர்களை கண்காணித்த போலீசார் நேற்று இருவரையும் கைது செய்தனர். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் 10ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இவர்கள் பெர்லின் நகரில் குண்டு வெடிப்பு சம்பவங்களை நடத்த திட்டமிட்டதாக தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us