/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/உள்ளாட்சித் தேர்தலுக்கு திருத்தணி நகராட்சியில் 39 ஓட்டுச் சாவடிகள்உள்ளாட்சித் தேர்தலுக்கு திருத்தணி நகராட்சியில் 39 ஓட்டுச் சாவடிகள்
உள்ளாட்சித் தேர்தலுக்கு திருத்தணி நகராட்சியில் 39 ஓட்டுச் சாவடிகள்
உள்ளாட்சித் தேர்தலுக்கு திருத்தணி நகராட்சியில் 39 ஓட்டுச் சாவடிகள்
உள்ளாட்சித் தேர்தலுக்கு திருத்தணி நகராட்சியில் 39 ஓட்டுச் சாவடிகள்
ADDED : செப் 12, 2011 11:40 PM
திருத்தணி : வரும் உள்ளாட்சித் தேர்தலில், திருத்தணி நகராட்சியில், 39 ஓட்டுச் சாவடிகள் அமைப்பது, அவை எவை என கவுன்சிலர்களுக்கு விளக்குவது குறித்து, அவசரக் கூட்டம் நடந்தது.
திருத்தணி நகராட்சியின் அவசரக் கூட்டம், நகராட்சித் தலைவர் பாமா சந்திரன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் ஆர்.சுமா வரவேற்றுப் பேசும் போது, வரும் உள்ளாட்சித் தேர்தலில், நகராட்சியில் உள்ள 21 வார்டுகளிலும், 39 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச் சாவடி என்ற வீதம், 39 ஓட்டுச் சாவடிகள் உருவாக்கியுள்ளோம். இதில், 16 ஆண் ஓட்டுச் சாவடியும், 16 பெண் ஓட்டுச் சாவடியும் மற்றும் 7 ஓட்டுச் சாவடிகள் ஆண், பெண் இருவரும் ஓட்டுளிக்கும் முறையில் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த உள்ளாட்சித் தேர்தலில், ஓட்டு சீட்டு பயன்படுத்தப்பட்டது. இம்முறை நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில், ஓட்டு பதிவு இயந்திரம் மூலம், வாக்காளர்கள் ஓட்டு போடுவார்கள்.
39 ஓட்டுச் சாவடிகள் எவை என்பது பற்றி கவுன்சிலர்களுக்கு விளக்குவதற்குத் தான், இந்த அவசரக் கூட்டம்' என்றார். இதில், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.


