/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/உள்ளாட்சி தேர்தலுக்கு "ரெடி'வரிந்து கட்டும் வேட்பாளர்உள்ளாட்சி தேர்தலுக்கு "ரெடி'வரிந்து கட்டும் வேட்பாளர்
உள்ளாட்சி தேர்தலுக்கு "ரெடி'வரிந்து கட்டும் வேட்பாளர்
உள்ளாட்சி தேர்தலுக்கு "ரெடி'வரிந்து கட்டும் வேட்பாளர்
உள்ளாட்சி தேர்தலுக்கு "ரெடி'வரிந்து கட்டும் வேட்பாளர்
ADDED : செப் 16, 2011 12:35 AM
திருவெண்ணெய்நல்லூர்:திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ளாட்சி தேர்தலுக்கு
முன்னதாகவே வேட்பாளரின் பெயரை எழுதி சுவர் விளம்பரம் செய்திருந்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானூர் கிராமத்தில்
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் வேட்பாளர் ஒருவரின் பெயரை
எழுதியுள்ளனர். சின்னத்திற்கு இடம் விட்டு சுவர் விளம்பரத்தை அவரது
ஆதரவாளர்கள் எழுதி வைத்துள்ளனர்.ஊராட்சி தலைவருக்கு போட்டியிடும் சுரேஷ்
என்பவருக்கு ஆதரவாக ஊரின் பல்வேறு இடங்களில் சுவர் விளம்பரங்கள்
பளிச்சிடுகின்றன. இவரை எதிர்த்து யார் போட்டியிடுகிறார்கள் என்பதை
கவலைப்படாமல் சுறுசுறுப்புடன் முன்னதாகவே சின்னத்திற்கு இடத்தை விட்டு
சுவர் விளம்பரம் எழுதியுள்ளதால் இந்த ஊரில் உள்ளாட்சி தேர்தல் துவங்கி
விட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.


