/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்தீர்வு காண மா.கம்யூ., வலியுறுத்தல்விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்தீர்வு காண மா.கம்யூ., வலியுறுத்தல்
விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்தீர்வு காண மா.கம்யூ., வலியுறுத்தல்
விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்தீர்வு காண மா.கம்யூ., வலியுறுத்தல்
விசைத்தறியாளர் வேலை நிறுத்தம்தீர்வு காண மா.கம்யூ., வலியுறுத்தல்
ADDED : செப் 16, 2011 01:28 AM
திருப்பூர்:கூலி உயர்வு கோரி நடந்து வரும் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்த
போராட்டத்துக்கு தீர்வு காண மா.கம்யூ., கோரிக்கை விடுத்துள்ளது.மா.கம்யூ.,
வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த மூன்று ஆண்டுகளாக அனைத்து பொருட்களின்
விலையும் கடுமையாக உயர்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை
சாவுகள் அதிகரித்துள்ளன. விசைத்தறி தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை
செய்தால், 120 ரூபாய் கூட கூலியாக கிடைப்பதில்லை. எவ்விதமான சட்ட உரிமைகளோ,
சமூக பாதுகாப்போ இல்லை.விசைத்தறி உரிமையாளர்கள், வேறு வழியில்லாமல் வேலை
நிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். 20 நாட்களுக்கு மேலாக வேலை நிறுத்தம்
தொடர்கிறது. தமிழக அரசு, இப்பிரச்னையில் தலையிட்டு நல்ல தீர்வு காண
வேண்டும். தினசரி எட்டு மணி நேர வேலை, குறைந்தபட்ச சம்பளம் 300 ரூபாய்
போன்ற தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. இப்பிரச்னைக்கு தீர்வு
காணக்கோரி, மா.கம்யூ., தெற்கு வட்டார குழு சார்பிப் வரும் 18ம் தேதி
ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். என, தெரிவித்துள்ளது.


