Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேட்பாளருக்கு சான்றிதழ் விரைவில் வழங்க உத்தரவு

வேட்பாளருக்கு சான்றிதழ் விரைவில் வழங்க உத்தரவு

வேட்பாளருக்கு சான்றிதழ் விரைவில் வழங்க உத்தரவு

வேட்பாளருக்கு சான்றிதழ் விரைவில் வழங்க உத்தரவு

ADDED : செப் 24, 2011 09:48 PM


Google News

குஜிலியம்பாறை : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஜாதி, இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்களை இரண்டு நாட்களில் வழங்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

வரும் 29 ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கால அவகாசம் இல்லாத இந்த அறிவிப்பு, தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத செயல் என, குமுறல் எழுந்துள்ளது. ஆனால், அதை ஈடுகட்டும் வகையில் அரசு இயந்திரம் முடுக்கிவிடப்பட்டு, அனைத்து அலுவலக பணிகளும் படு வேகத்தில் நடக்கின்றன. குறைந்த நாட்களே உள்ளதால், வேட்பாளர்களுக்கு தேவையான ஜாதி, இருப்பிட சான்றிதழ்களை இரண்டு நாட்களுக்குள்ளும்; வீடு, குடிநீர் வரி ரசீதுகள், போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு இல்லை என்ற சான்றுகளை உடனடியாகவும் வழங்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன்படி பணிகள் வேகமடைந்துள்ளன.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us