/உள்ளூர் செய்திகள்/சென்னை/வேட்பாளர்களை மாற்றக் கோரி அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்வேட்பாளர்களை மாற்றக் கோரி அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்
வேட்பாளர்களை மாற்றக் கோரி அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்
வேட்பாளர்களை மாற்றக் கோரி அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்
வேட்பாளர்களை மாற்றக் கோரி அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்
ADDED : செப் 26, 2011 09:07 PM
சென்னை : சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் சிலரை மாற்றக் கோரி அ.தி.மு.க., வினர் வலியுறுத்தினர்.
வில்லிவாக்கம் தொகுதி நொளம்பூர் 143 வது வார்டு ஆதிதிராவிடருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வார்டு வேட்பாளராக பவானி கஜபதி அறிவிக்கப்பட்டார். இவர் இளம்பெண்கள் பாசறை நிர்வாகியாக உள்ளார். தற்போது இவர் மாற்றப்பட்டு, புதிய வேட்பாளராக ஷீலா இம்மானுவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி கஜபதி ஆதரவாளர்கள் போயஸ்கார்டனில் மனு அளித்தனர். மதுரவாயல் 146வது வார்டுக்கு அ.தி.மு.க., வேட்பாளராக ஜீவானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். நகராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்டவர் என்ற குற்றச்சாட்டு ஜீவானந்தம் மீது எழுப்பப்பட்டுள்ளது. அவரையும் மாற்ற வேண்டும் என அப்பகுதி அ.தி.மு.க., வினர் நேற்று போயஸ்கார்டனில் மனு அளித்தனர். மதுரவாயல் 144 வது வார்டு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள்யுகா மாற்றப்பட்டுள்ளார். மாவட்டச்செயலர் பரிந்துரையின் பேரில் அருள்யுகாவின் உறவினர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். புதிய வேட்பாளருக்கும் அ.தி.மு.க., வினர் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த வேட்பாளர்களை மாற்றாவிட்டால் போட்டி வேட்பாளராக களம் இறங்கவும் அதிருப்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.


