/உள்ளூர் செய்திகள்/மதுரை/ரோட்டோரங்களில் பிளக்ஸ் அகற்ற கலெக்டர் உத்தரவுரோட்டோரங்களில் பிளக்ஸ் அகற்ற கலெக்டர் உத்தரவு
ரோட்டோரங்களில் பிளக்ஸ் அகற்ற கலெக்டர் உத்தரவு
ரோட்டோரங்களில் பிளக்ஸ் அகற்ற கலெக்டர் உத்தரவு
ரோட்டோரங்களில் பிளக்ஸ் அகற்ற கலெக்டர் உத்தரவு
ADDED : அக் 04, 2011 12:44 AM
மதுரை : உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ரோட்டோரம் அனுமதியின்றி வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளை அகற்ற கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார்.
மதுரையில் ரோடுகளில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்புகள் உள்ளன. காதுகுத்து முதல் அனைத்து விசேஷங்களுக்கும் பிளக்ஸ் ஆதிக்கம் அதிகம். இதுதவிர பல நிறுவனங்களின் விளம்பர போர்டுகளும் அனுமதியின்றி ரோட்டோரம் உள்ளன. தேர்தல் நடக்க உள்ளதையொட்டி அனுமதியின்றி உள்ளவற்றை அகற்ற வேண்டும், என கலெக்டர் சகாயம் உத்தரவிட்டார். விழாக்கள், பொதுக் கூட்டங்கள் முடிந்த பின்னும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளன. எனவே அனுமதி பெற்றவற்றுடன், அவற்றையும் அகற்ற வேண்டும் என வருவாய்த்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


