திருச்சி போலீஸ் கமிஷனர் மீதுதேர்தல் கமிஷனிடம் தி.மு.க., புகார்
திருச்சி போலீஸ் கமிஷனர் மீதுதேர்தல் கமிஷனிடம் தி.மு.க., புகார்
திருச்சி போலீஸ் கமிஷனர் மீதுதேர்தல் கமிஷனிடம் தி.மு.க., புகார்
ADDED : அக் 08, 2011 08:49 PM
சென்னை: இடைத் தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவதை சீர்குலைக்கும் வகையில், திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து செயல்படுகிறார் என, தேர்தல் கமிஷனிடம், தி.மு.க., புகார் செய்துள்ளது.இதுகுறித்து, தி.மு.க., சட்டப் பிரிவு செயலர் ஆர்.எஸ்.பாரதி, அமைப்பு செயலர் டி.கே.எஸ்.
இளங்கோவன் ஆகியோர், தலைமை தேர்தல் கமிஷனரிடம் அளித்த புகார் மனு:அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும், ஆளும் கட்சியினரை திருப்திபடுத்தும் வகையிலும், தி.மு.க., பொறுப்பாளர்கள் மீது, பொய் வழக்குகளை, திருச்சி போலீஸ் கமிஷனர் பதிவு செய்துள்ளார். மேலும், அவரது அதிகார எல்லையை மீறியும் செயல்பட்டு வருகிறார். திருச்சி இடைத் தேர்தலில், தி.மு.க., போட்டியிடுவதை சீர்குலைக்கும் வகையில், அவரது நடவடிக்கைகள் உள்ளன.இதேபோல், கோவை மாவட்டத்தில், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த, 600 பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து, மாவட்ட கலெக்டர் நீக்கியுள்ளார். வாக்காளர் பதிவு விதிகளை பின்பற்றாமல், உள்ளூர் அ.தி.மு.க.,வினரின் வற்புறுத்தலின் பேரில், கலெக்டர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளார்.எனவே, இவற்றின் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கையை, தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


