Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஒரே ஒரு தொழிற்சாலை;12 ஆயிரத்து 500 மரங்கள்!

ஒரே ஒரு தொழிற்சாலை;12 ஆயிரத்து 500 மரங்கள்!

ஒரே ஒரு தொழிற்சாலை;12 ஆயிரத்து 500 மரங்கள்!

ஒரே ஒரு தொழிற்சாலை;12 ஆயிரத்து 500 மரங்கள்!

ADDED : அக் 09, 2011 01:37 AM


Google News
கோவை : கோவை 'ராஜா ஸ்டீல்' நிறுவனத்துக்குச் சொந்தமான தொழிற்சாலையில், 120 ஏக்கர் பரப்பில், 12 ஆயிரத்து 500 மரங்கள் வளர்க்கப்படுகின்றன.கோவை 'ராஜா ஸ்டீல்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜா கூறியதாவது:எங்களது ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு, பாலக்காட்டில்தான் முதலில் துவக்கப்பட்டது.

பங்கு பிரிக்கப்பட்டபின், கடந்த 2009-2010ல் திருமலையாம்பாளையத்தில் எங்களது முதலாம் யூனிட் துவக்கப்பட்டது. அங்கு தொழிற்சாலையைத் துவக்கியபோது, மாதத்துக்கு 2லிருந்து 3 ஆயிரம் டன் வரை ஸ்டீல் உற்பத்தி நடந்தது; இப்போது மாதம் 5 ஆயிரம் டன் வரை உற்பத்தி நடக்கிறது.ஏற்கனவே, திண்டுக்கல்லில் 'திண்டுக்கல் ஸ்டீல்' என்ற பெயரில், எங்களது நிறுவனம் மாதத்துக்கு 4 ஆயிரம் டன் அளவுக்கு கம்பிகளை உற்பத்தி செய்து வருகிறது. இப்போது, தேவை அதிகரித்து வருவதால், முசிறிக்கு அருகே 'திருச்சி சுமதி ஸ்டீல்ஸ்' என்ற பெயரில், புதிய தொழிற்சாலையை, கடந்த மார்ச் மாதத்தில் ஆரம்பித்துள்ளோம்.அங்கு மாதத்துக்கு 15 ஆயிரம் டன் அளவுக்கு கம்பிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்த கம்பிகளும் 'ராஜா ஸ்டீல்' என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படுகின்றன. எங்களது நிறுவனங்களின் வருடாந்திர வர்த்தகம், 500 கோடி ரூபாயாகவுள்ளது. தற்போது 'ஸ்பாஞ்ச் அயர்ன்' உற்பத்தியும் நடப்பதால் 2012க்குள் 750 கோடி ரூபாய்க்கு வர்த்தகத்தை எட்டி விடுவோம்.எங்களது நிறுவனங்கள் மூலமாக, 4 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு தரப்பட்டுள்ளது. உற்பத்திக்குத் தரும் முக்கியத்துவத்தை விட, மாசு கட்டுப்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறோம். இதற்காக, 33 சதவீதத் தொகையை 'மாசு கட்டுப்பாட்டு'க்காகச் செலவிடுகிறோம். தொழிற்சாலைகள் அனைத்திலும் பசுமைப்பரப்பை அதிகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளோம்.இதன் ஒரு பகுதியாக, 'சுமதி ஸ்டீல்ஸ்' நிறுவனம் அமைந்துள்ள 140 ஏக்கர் பரப்பில், 20 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலையை அமைத்து விட்டு, மீதமுள்ள 120 ஏக்கர் பரப்பிலும் மரங்களை வளர்த்து வருகிறோம். அங்கு 12 ஆயிரத்து 500 மரக்கன்றுகள் வைக்கப்பட்டு, அத்தனையும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன.மின் உற்பத்தியிலும் தன்னிறைவு பெறும்பொருட்டு, திருநெல்வேலி அருகேயுள்ள தேவர்குளத்தில் 6 காற்றாலைகளை நிறுவி, 7.5 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்கிறோம். எந்த வித மாசும் இல்லாமல் நாங்களே எங்களுக்குத் தேவையான 100 சதவீத மின்சாரத்தையும் உற்பத்தி செய்து, அரசிடம் கொடுத்து, தேவையான போது பெற்றுக்கொள்கிறோம்.இவ்வாறு, ராஜா தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us