ADDED : அக் 11, 2011 02:17 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே பள்ளியில் இரும்பு கம்பி திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் சாய்ராம் மெட்ரிக் பள்ளி உள்ளது.
இங்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடக்கிறது. இப்பணிகளை ஆர்.எஸ்.ஆர்., என்ற காண்டிராக்ட் நிறுவனம் செய்து வருகிறது. பணிகளுக்கான கம்பி, சிமெண்ட் மூட்டைகள் ஓரிடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதிலிருந்து கம்பிகள் மட்டும் அடிக்கடி திருடுபோயின. இது குறித்து காண்டிராக்ட் நிறுவன மேலாளர் அருணாசலம், போலீஸில் புகார் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் வழக்குப்பதிவு செய்து திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பூவராகவன் மகன் பிரபாகரன் (19) என்பவரை கைது செய்தார். மேலும் நான்கு பேரை தேடி வருகிறார்.


